மா‌ர்‌ச் மாத ஜோதிடம் : 3, 12, 21, 30


3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தடைப்பட்ட வேலைகள் முடியும். திடீர் நன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். புது வேலை அமையும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.



ஓரளவு உடல் நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். எதிர்மறை சிந்தனைகள், வீண் டென்ஷன், தந்தையுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும்.

சொத்து சம்பந்தப்பட்ட வழக்கை நிதானமாக கையாளுங்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். சொத்து வாங்குவதற்கு முன்பாக தாய்பத்திரத்தை சரி பார்க்கவும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். பெற்றோரை அனுசரித்துப் போங்கள். பயணங்களின் போது கவனம் தேவை.

அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மேலிடத்தை பற்றி விமர்சனம் செய்யாதீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். பற்று வரவு சுமார்தான். உத்‌தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினர்களே! வர வேண்டிய சம்பள பாக்கிகளை போராடி பெறுவீர்கள். இங்கிதமான பேச்சால் முன்னேறும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 7, 13, 16, 23, 26
அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 8
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், ஆரஞ்சு
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வியாழன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment