ஜூ‌லை மாத ஜோதிடம் : 8, 17, 26


8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தைரியம் கூடும். திடீர் முன்னேற்றம், பதவி, பட்டம் மற்றும் அரசால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி அமையும்.


இளைய சகோதர வகையில் உதவியுண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பூர்வீகச் சொத்துச் சிக்கல் முடிவுக்கு வரும். புதிதாக ஃப்ரிஜ், டிவி வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.

வீட்டை அழகுபடுத்துவீர்கள். அவ்வப்போது மன அழுத்தம், விரக்தி, தடுமாற்றம் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். வியாபாரத்தில் சில சலுகை திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள்.

பிரச்சனை தந்த பங்குதாரர் விலகுவார். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்‌தியோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினர்களே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். எதார்த்தமான பேச்சால் காரியம் சாதிக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 6, 8, 14, 23
அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 5
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : கிரே, பிஸ்தாபச்சை
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment