7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வேற்றுமதம், மொழியினர், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். ஓரளவு பணவரவு உண்டு என்றாலும் வெளியில் கடன் வாங்க வேண்டியிருக்கும். வாகனம் அடிக்கடி தண்டச் செலவு வைக்கும். சாலையை கடக்கும் போது நிதானம் தேவை. ஆடியோ, வீடியோ சாதனங்கள் பழுதாகும்.
உறவினர்கள், நண்பர்கள் உங்கள் நிலையறியாது உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். பிற்பகுதியில் சொத்துப் பிரச்னையை கவனமாக கையாளுங்கள். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். அரசியல்வாதிகளே! தலைமையிடம் உங்களைப்பற்றிய தவறான வதந்திகள் பரவக்கூடும். கன்னிப் பெண்களே! வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.
வியாபாரத்தில் புது முதலீடுகளை யோசித்து செய்வது நல்லது. பங்குதாரர்களுடன் வளைந்து போங்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். கலைத்துறையினர்களே! கிடைக்கின்ற வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுங்கள். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 2, 6, 11, 20, 25
அதிர்ஷ்ட எண்கள் : 4, 9
அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஊதா
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், சனி
0 comments:
Post a Comment