6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சவாலில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். கௌரவப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணபலம் உயரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். ஏளனமாகப் பார்த்த உறவினர்களுக்கு பதிலடி தருவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப சொத்து அமையும். ஆடை, ஆபரணம் சேரும். நவீன ரக சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
மூத்த சகோதரருக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். ஆனால் மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! சகாக்களுடன் இருந்த மோதல்கள் விலகும். கன்னிப் பெண்களே! புது வேலைக் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியடையும்.
அவ்வப்போது குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த பங்குதாரர்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். பணியாளர்களும் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள். விவேகமான முடிவுகளெடுக்கும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 4, 5, 15, 24,
அதிர்ஷ்ட எண்கள் : 2, 4
அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலட்
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், வெள்ளி
0 comments:
Post a Comment