5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் புகழ், கௌரவம் உயரும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் தேடி வரும். மகனின் பிடிவாதம் குறையும்.
தடைபட்டிருந்த வீடு கட்டும் பணியை தொடங்க பணம் கிடைக்கும். பழைய உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அவ்வப்போது வீண் செலவு, டென்ஷன், மனக்குழப்பம் வந்துப் போகும். மையப்பகுதியில் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். அம்மாவுக்கு மருத்துவச் செலவு உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம்.
சகோதரரின் வருங்காலம் குறித்த கவலை வந்து விலகும். தள்ளிப் போன அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். கன்னிப் பெண்களே! கல்யாணப் பேச்சு வார்த்தை முன்னேற்றம் தரும்.
வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு இலாபத்தைப் பெருக்குவீர்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில் உங்களின் பரந்த மனசை மூத்த அதிகாரி புரிந்துக் கொண்டு உதவுவார். கலைத்துறையினர்களே! அதிரடி சலுகையுடன் எதிர்பார்த்த வாய்ப்புகளும் தேடி வரும். வாக்கு சாதுர்யத்தால் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 6, 8, 17, 24,
அதிர்ஷ்ட எண்கள் : 6, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, க்ரீம் வெள்ளை
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், சனி
0 comments:
Post a Comment