மே மாத ஜோதிடம் : 6, 15, 24

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சலிப்பு, சோர்வு நீங்கும். பணம் வரும். ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். 

உறவினர் வீட்டு கல்யாணத்தை திறம்பட எடுத்து நடத்துவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். வி. ஐ. பிகளின் தொடர்பு கிடைக்கும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேலைக் கிடைக்கும். வேற்றுமதம், இனத்தவர்களால் நன்மை உண்டு. 


கடந்த கால இனிய அனுபவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். அவ்வப்போது பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். சகோதரங்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வழக்கில் நிதானம் அவசியம். அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். 

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்‌தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். அந்தஸ்து ஒருபடி உயரும் மாதமிது. 

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 5, 6, 8, 15, 24
அதி‌ர்ஷ்ட எண்கள் : 7, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வியாழன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment