மே மாத ஜோதிடம் : 5, 14, 23


5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மனஇறுக்கும் நீங்கும். சவாலான சில வேலைகள் சாதாரணமாக முடியும். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள். 

புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். தாயாருக்கு இருந்த முதுகு, கழுத்து வலி விலகும். வாகன வசதிப் பெருகும். வீடு மாறுவது, உங்கள் ரசனைக் கேற்ற இடம் அமையும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதரங்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். 

சொத்து வாங்குவது விற்பதில் இருந்த இழுபறி நிலை மாறும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அவ்வப்போது களைப்பு, சோர்வு, முதுகுத் தண்டில் வலி வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார். கன்னிப் பெண்களே! வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். 

வியாபாரத்தில் எதிர்பார்ததை விட லாபம் அதிகரிக்கும். பழைய வேலையாட்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உணவு, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. உத்‌தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் கற்பனைத்திறன் வளரும். உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் மாதமிது. 

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 1, 5, 6, 8, 14, 17, 
அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெளிர்நீலம், ஆரஞ்சு
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment