ஏ‌ப்ர‌ல் மாத எண் ஜோதிடம் : 8, 17, 26


8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். பணவரவு திருப்தி தரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். யோகா, தியானம் செய்வதால் நிம்மதி கிட்டும். பழைய கடன் பிரச்னை தீரும்.



நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அவ்வப்போது மனதில் இனம்புரியாத பயம், முன்கோபம், கால் வலி, உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். நண்பர்கள், உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். ஆடியோ, வீடியோ சாதனங்கள் பழுதாகும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். அரசு விவகாரங்களில் அவசரம் வேண்டாம்.

வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்ததுக் கொள்ளுங்கள். லாபம் மந்தமாக இருக்கும். உத்‌தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கலைத்துறையினர்களே! உங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் வரக்கூடும். கோபத்தைக் குறைக்க வேண்டிய மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 8, 17, 19, 23, 24, 27
அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, ஊதா
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வியாழன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment