ஏ‌ப்ர‌ல் மாத எண் ஜோதிடம் : 9, 18, 27


9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் கற்பனை வளம் பெருகும். முகப்பொலிவுக் கூடும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடையும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.



பிள்ளைகளின் அடிமனதில் இருக்கும் பயத்தை போக்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்த உறவினரை சந்திப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள்.

குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் சென்று வருவீர்கள். அவ்வப்போது ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். மூத்த சகோதர வகையில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள்.

பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்‌தியோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். கலைத்துறையினர்களே! மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். இழுபறி நிலைமாறி ஏற்றம் பெறும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 9, 14, 16, 18, 23, 27
அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 5
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : கருநீலம், கிரே
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment