7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சாதிப்பீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் கூடாப் பழக்கம் விலகும். தூரத்து உறவினர்களை சந்திப்பீர்கள்.
மனைவி வழியில் இருந்த மோதல்கள் விலகும். வாகன வசதிப் பெருகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். நட்பு வட்டம் விரியும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும்.
அவ்வப்போது உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் இருந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும். கலைத்துறையினர்களே! கடின உழைப்பால் சாதித்துக் காட்டுவீர்கள். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 7, 11, 13, 16, 18, 25
அதிர்ஷ்ட எண்கள் : 5, 8
அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், மெரூண்
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, சனி
0 comments:
Post a Comment