ஏ‌ப்ர‌ல் மாத எண் ஜோதிடம் : 6, 15, 24


6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.



பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. நண்பர்கள் பக்கபலமாக இருப்பார். வேற்றுமதம், வெளிநாட்டில் இருப்பவர்களின் நட்புக் கிட்டும். சொத்து விஷயத்தில் கவனமாக இருங்கள்.

சகோதர பகை, சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். வழக்கில் அவசரம் வேண்டாம். திடீர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். அரசு காரியங்கள் முடியும்.

வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்க்க புதிய சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். உத்‌தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். எதிர்ப்புகளை சமாளிக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 6, 15, 24, 27, 28, 30
அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, ஆரஞ்சு
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment