ஏ‌ப்ர‌ல் மாத எண் ஜோதிடம் : 5, 14, 23


5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள்.



மகனுக்கு வேலைக் கிடைக்கும். பழைய சொந்தங்கள் தேடி வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பழைய நகை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வலிய வந்து உதவுவார்கள்.

வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசியலில் செல்வாக்குக் கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். அவ்வப்போது வீண் செலவு, வேலைச்சுமை, தாயாருக்கு கை, கால், நெஞ்சு வலி வந்து விலகும்.

வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்‌தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் அன்பைப் பெறுவீர்கள். சமயோஜித புத்தியால் சாதிக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 9, 10, 13, 15, 17, 19
அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளம்சிவப்பு
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment