தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் நீங்கள், எதிரிகளையும் சிந்திக்க வைக்கும் செயல்திறன் கொண்டவர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் சவாலான காரியங்களை கூட
எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன் வகைகளால் லாபமடைவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு, பாகப்பிரிவினையில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.
கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணவரவை தந்த குருபகவான் 28ந் தேதி முதல் 12ல் மறைவதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். அயல்நாட்டில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்களுடைய ராசிக்கு 4ம் வீட்டில் சனியும், ராகுவும் நிற்பதால் மூட்டு வலி, முதுகு வலியால் தாயார் சிரமப்படுவார். தாயாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். கட்டிட வரைபட அனுமதி பெறாமல் வீடு கட்ட வேண்டாம்.
அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். மாநில அளவில் ஒருசிலருக்கு பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தொகுதி மக்களுக்கு நெருக்கமாவீர்கள். மாணவர்களே! பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நுழைவுத் தேர்வில் வெற்றி உண்டு. உயர்கல்வி ஸ்தானத்தில் சனியும், ராகுவும் நிற்பதால் கொஞ்சம் போராட்டத்திற்கு பின்பு எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள். கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியடைவீர்கள். கூடாப் பழக்க வழக்கங்களை தவிர்த்து விடுங்கள். பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். உங்களிடம் அன்பாகப் பேசி சிலர் உங்களை பாதை மாற்றக் கூடும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கட்டிட உதிரி பாகங்கள், உணவு, துணி, வாகன வகைகளால் லாபமடைவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கடையை அழகுபடுத்துவீர்கள். விரிவுபடுத்துவீர்கள். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.
எதிர்பார்த்தபடி இடமாற்றம் கிடைக்கும். தேர்வில் வெற்றி பெற்று அதன்மூலமாக கூடுதல் கல்வித் தகுதி கிடைத்து பதவி உயர்வும் கிடைக்கும். கலைத்துறையினரே! சம்பளபாக்கி கைக்கு வரும். பழைய பெரிய கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய வாய்ப்புகளையும் பெற்றுத் தருவார்கள். விவசாயிகளே! கிணற்றை தூர்வாருவீர்கள். வற்றிய கிணறில் நீர் சுரக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 18, 19, 20, 21, 22, 23, 27, 28, 30 ஜூன் 5, 6, 8, 9, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருபுவனம் சரபேஸ்வரரை தரிசியுங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.
0 comments:
Post a Comment