பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாகப் பழகும் நீங்கள், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட மாட்டீர்கள். 25ந் தேதி முதல் உங்கள் ராசிநாதன் புதன் ராசிக்குள் ஆட்சிபெற்று அமர்வதால் குடும்பத்தில்
அமைதி உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பணப் பற்றாக்குறையை சரி செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். 20ந் தேதி வரை செவ்வாய் சாதகமாக இருப்பதால் சகோதர, சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.
21ந் தேதி முதல் 12ல் செவ்வாய் மறைவதால் உடன்பிறந்தவர்களால் பிரச்னைகள் இருந்தாலும் பாசம் குறையாது. சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். சொத்து வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை சரி பார்த்து வாங்குங்கள். கடந்த ஓராண்டு காலமாக 12ல் அமர்ந்து அலைச்சல், செலவுகள், ஏமாற்றங்களை தந்த குருபகவான் 28ந் தேதி முதல் ராசிக்குள் நுழைவதால் ஏமாற்றங்கள், வீண் பழி விலகும். ஆனால், ஜென்ம குருவாக வருவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பிள்ளை பாக்யம் உண்டு. 5ம் வீட்டில் சனியும், ராகுவும் நிற்பதால் உறவினர்களில் ஒருசிலர் நன்றி மறந்து பேசுவார்கள். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். அதைப் பெரிதுபடுத்த வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். போராட்டங்கள், உண்ணாவிரதங்களை தலைமை தாங்கி வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். திருமணம் கூடி வரும். மாணவர்களே! உங்களின் பொது அறிவுத்திறன் வளரும். கேது லாப வீட்டில் நிற்பதால் வியாபாரம் தழைக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் விடுப்பால் மற்றவர்களின் வேலை களையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்பால் எல்லோரின் பாராட்டையும் பெறுவீர்கள். விவசாயிகளே! தோட்டப் பயிர்கள், காய், கனிகள் மூலமாக லாபம் வரும். சுபச் செலவுகள் அதிகரிக்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
மே 16, 17, 19, 20, 21, 25, 26, 27, 28 ஜூன் 3, 4, 5, 6, 8, 12, 13.
சந்திராஷ்டம தினங்கள்:
மே 29, 30 ஆகிய தேதிகளில் வீண் டென்ஷன் அதிகரிக்கும்.
பரிகாரம்:
சிதம்பரம் நடராஜரை தரிசித்து வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.
0 comments:
Post a Comment