Movie name: Chinna Thambi (1991)
Music: Ilaiyaraja
Singer(s): S. P. Balasubrahmanyam
Lyrics: Gangai Amaran
பெண்குழு : (குலவை) செம்பவழ முத்துக்கள சேர்த்து வச்ச சித்திரமே
தங்க வளை வைர வளை போட்டிருக்கும் முத்தினமே
வாய் திறந்து நீ சிரிச்சா பாத்திருக்கும் அத்தனையும்
நீ வளர்ந்துப் பார்த்திருந்தா தோத்து விடும் இத்தனையும் (குலவை) (இசை)
ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ
அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே

(இசை) சரணம் - 1
ஆண் : பூவடி அவ பொன்னடி அதை தேடிப் போகும் தேனீ
தேனடி அந்த திருவடி அவ தேவலோக ராணி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு உங்களைப் படைச்சதாரு
என்னைக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேரோ
அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ
அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
(இசை) சரணம் - 2
ஆண் : மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூநிறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நினைப்பு சிதறும்
ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான்
பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு
சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு
கைகளைத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேரோ
அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ
அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
0 comments:
Post a Comment