கன்னி பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2013


கன்னி புத்தி’ என்பதற்கேற்ப எல்லாத் துறைகளிலும் ஆற்றல் பெற துடிக்கும் கன்னி ராசி வாசகர்களே! ஒன்பதாம் இடத்தில் குரு இருப்பது சிறப்பு.
செவ்வாயின் பார்வை உங்கள் ராசியில் படுவதும் நன்மையே ஆகும். தனபாக்யாதிபதியான சுக்கிரன் லாப ஸ்தானத்தை பார்க்கிறார். இதனால் நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டு. மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல்கள் அடியோடு மறையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.  நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும்.

வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்துகள் வாங்கலாம். தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.  வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும்போது கவனம் தேவை. உத்யோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடைவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சிலர் அதிகாரி அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவார். வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேலை பெறுவர். வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்தோடு சேருவார்கள்.

வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களை காணலாம்.  தொழில் நிமித்தமாக சிலர் தூரதேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.
இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத வேதனை மறையும். பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும்.

பரிகாரம்:

தன ஸ்தானத்தில் ராகுவும் சனியும் இணைந்திருப்பதால் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயிலுக்குச் சென்று வரவும்.

சந்திராஷ்டம தினங்கள்:

15, 16, 17 ஆகிய தேதிகளில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்ப்பது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம்:

‘‘ஓம் கேசவமாதவகோவிந்தாய நமஹ’’ என்று தினமும் 108 முறை சொல்லவும்.

மலர் பரிகாரம்:

எலுமிச்சை மாலையை புதன்தோறும் அம்மனுக்கு அர்ப்பணித்து வழிபட, அவள் அருள் உடன் வரும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment