சமம் தராசு’ என்பதற்கேற்ப அனைத்து விதமான மக்களையும் ஒரே நியாயத் தராசில் வைத்துப் பார்க்கும் துலாம் ராசி வாசகர்களே! தற்போது இருக்கும்
கிரக சூழ்நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் நன்மைகளை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள். அதே வேளையில் தெய்வ அனுகூலமும் உண்டு. பொருளாதார வளம் சிறப்படையும். ராசியில் இருக்கும் சனி, ராகுவாலும் சப்தமத்தில் இருக்கும் கேதுவாலும் செய்யும் முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். தம்பதியிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் முயற்சிகளால் நடந்தேறும்.
உத்யோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன்பணிபுரிவோரால் அனுசரணை உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். தொழில் செய்பவர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டும் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியிலிருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவதற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். மாத பிற்பாதி மிகவும் நன்றாக இருக்கும். வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியிலுள்ள பிரச்னைகள் முடியும்.
சுய ஜாதகத்தில் தசாபுக்திகள் அனுகூலமற்றிருப்பின் தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். மூன்றாம் வீட்டுக்குரியவர் எட்டில் உலவுவதால் இளைய சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். அரசியல்வாதிகளுக்கு மாதத்தின் முற்பகுதி பாடுபட வேண்டியிருந்தாலும் பிற்பாதி மிகவும் நன்றாக இருக்கும். மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துப் படிப்பது அவசியமாகும்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமை தோறும் சிவன் கோயிலிலுள்ள நவகிரக சந்நதியை ஒன்பது முறை வலம் வந்து வழிபடவும்.
சந்திராஷ்டம தினங்கள்:
18, 19 தேதிகளில் புதிய முயற்சிகள் வேண்டாம்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
‘‘ஓம் கனகவித்யாம் நமஹ’’ என்று தினமும் ஏழு முறை கூறவும். கோளறு பதிகம் பாராயணம் செய்யுங்கள்.
மலர் பரிகாரம்:
தாமரை மலரை குருவுக்கு அர்ப்பணித்து பிரார்த்தனை செய்யுங்கள்.
0 comments:
Post a Comment