மே மாத ஜோதிடம் : 8, 17, 26

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பிள்ளைகளை அதிகம் செலவு செய்து அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். 

உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. ஷேர் பணம் தரும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புது பதவி, பொறுப்பு, உத்‌தியோகம் தேடி வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். உடன்பிறந்தவர்கள் மதிப்பார்கள். 


அவ்வப்போது ஒருவித படபடப்பு, வீண் பழி, கவலைகள், விபத்து வந்துச் செல்லும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். அரசியல்வாதிகளே! வீண் வறட்டுக் கவுரவத்திற்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். 

வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். கணிசமாக லாபம் உயரும். வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்‌தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். இங்கிதமான பேச்சால் முன்னேறும் மாதமிது. 

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 6, 8, 14, 15, 23
அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 3
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், பிங்க்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி, சனி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment