ஆனி மாத ராசி பலன்கள் - மகரம்

பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களைச் செய்ய வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள். உங்களுக்கு சூரியன் சாதகமாக நிற்பதால்  புதிய முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். அரசு
சம்பந்தப்பட்ட விஷயங்கள் உடனே முடியும். அதிகாரப் பதவியில்  இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். தீர்ப்பு  சாதகமாகும். குரு, சுக்கிரன், புதன் ஆகிய முக்கிய கிரகங்கள் மறைந்திருப்பதால் செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போகும்.

உங்களைப் பற்றி சிலர் அவதூறாகப் பேசக்கூடும். உறவினர்கள், நண்பர்களில் சிலர் கெட்டவர்களாக இருப்பதை நினைத்து வருந்துவீர்கள். கணவன்,  மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் சச்சரவுகள் வரக்கூடும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மகனுக்கோ அல்லது மகளுக்கோ வாழ்க்கைத்  துணையை தேர்ந்தெடுப்பதில் அவசரம் வேண்டாம்.  சுக்கிரன் 23ந் தேதி முதல் 7ம் வீட்டில்  அமர்ந்து உங்களை பார்க்க இருப்பதால் ஓரளவு பண  நெருக்கடியை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். செவ்வாய் 4ந் தேதி முதல் 6ல் மறைவதால் வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாகும். சகோதர  வகையிலும் உதவிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்தை சீர்திருத்தம் செய்து கொண்டிருக்காதீர்கள்.

பாகப்பிரிவினை, பங்காளிப் பிரச்னை விஷயத்தில் எல்லாம் பட்டும் படாமலும் இருப்பது நல்லது.  அரசியல்வாதிகளே! தலைமைக்கு  நெருக்கமானவர்களின் தனி நபர் விமர்சனத்தை தவிர்த்திடுங்கள். மாணவர்களே! எதிர்பார்த்த  கல்விப் பிரிவில் போராடி சேருவீர்கள்.   ஆரம்பத்திலிருந்தே கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். உயர்கல்வியில் அதிக  அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

வேலையாட்கள், பங்குதாரர்களின் நிம்மதி குறையும். மாதத்தின் மத்தியப் பகுதியிலிருந்து ஓரளவு லாபம் வரும். இறுதிப் பகுதியில் இழந்த லாபத்தை  பெறுவீர்கள். உணவு, கட்டிட வகைகளில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் வரும். வேலைச்சுமை அதிகரிக்கும்.  வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.  கலைத்துறையினரே!  கிசுகிசுத் தொல்லைகள் வந்து நீங்கும். சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள்.  விவசாயிகளே! அவசரப்படாமல் இருங்கள். பம்பு செட் பழுதாகி சரியாகும். எங்கும் எதிலும் நிதானமும் சகிப்புத்தன்மையும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூன் 19, 20, 21, 22, 24, 28, 29, 30, ஜூலை 1, 3, 9, 10.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 15, 16 மாலை 4 மணி வரை மற்றும் ஜூலை 11ந் தேதி மதியம் 2:30 மணி முதல் 12, 13 வரை புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடாதீர்கள்.

பரிகாரம்: உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment