உழைப்பவரே உயர்ந்தவர்’ என்பதற்கேற்ப அனைவராலும் விரும்பப்படும் மேஷ ராசி அன்பர்களே, ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் அமர
கர்மாதிபதியின் வீட்டில் சூரியன், புதன், சனி போன்றோர் ராசியைப் பார்க்க, குரு தன ஸ்தானத்தில் இருக்க என்று நெருக்கடியான நிலை இருந்தாலும் குடும்பத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குறிப்பாக நல்ல பணப் புழக்கத்தையும் பொருளாதார ஏற்றமும் காணப்படும். சனி சாதகமற்ற பலன்களை கொடுத்தாலும் குருவின் இருப்பு நன்மையையே அளிக்கும்.
காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் ஏழாம் இடத்தில் இருக்கும் ராகுவால் சிற்சில பிரச்னைகள் வரத்தான் செய்யும். பொறுமை காக்கவும். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். உறவினரால் நன்மை ஏற்படும். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வருமானத்தில் எந்தக் குறையும் இருக்காது. கண்டகச் சனியின் காலகட்டத்தில் இருப்பதால் புதிய முதலீடுகளின்போது ஆலோசனைகள் அவசியமாகிறது.
பண விஷயத்தில் தொடர்ந்து அக்கறை தேவை. கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொருளாதார ரீதியாக சிறப்பாகத்தான் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். மாதத்தின் பிற்பகுதி மிகவும் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்துப் போக வேண்டியிருக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம் மயக்கம் தொடர்பான பிரச்னைகள் வரலாம். குருவின் பார்வை ருணரோக ஸ்தானத்தில் விழுவதால் மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும்.
பரிகாரம்:
சனிக்கிழமைதோறும் பெருமாள் கோயிலில் உள்ள கருட மூர்த்தியை வணங்கவும்.
சந்திராஷ்டம தினங்கள்:
5, 6 தேதிகளில் வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.
சொல்ல வேண்டிய மந்திரம்:
‘‘ஓம் காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியினில் நோக்க’’ என்ற கந்த சஷ்டி வரியினை 12 முறை சொல்லவும்.
மலர் பரிகாரம்:
எருக்கம் பூவை விநாயகருக்கு சாத்தவும். முழுமுதற்கடவுளை வழிபட அனைத்தும் நன்மையாக நடக்கும்.
0 comments:
Post a Comment